கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கோப் குழுவிற்கு நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.

 கோப் குழுவின் 8 உறுப்பினர்கள் இராஜினாமா

கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கோப் குழுவிற்கு நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.

அதன்படி, முன்னாள் கோப் குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் சரித ஹேரத் மற்றும் எரான் விக்கிரமரத்ன, தயாசிறி ஜயசேகர, எஸ்.எம்.மரிக்கார், ஷனக்கியன் ராசமாணிக்கம், ஹேஷா விதானகே, காமினி வலேகொட ஆகியோர் பதவி விலககிவுள்ளனர்.

அத்துடன், இன்று (20) அந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்ட சட்டத்தரணி வசந்த யாப்பா கந்தாரவும் சில நிமிடங்களுக்கு முன்னர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎