இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை..

மாணவர்களிடம் பணம் வசூலித்து தனியார் வகுப்புகளை நடத்த தடை.


தென் மாகாண ஆசிரியர்கள் அவர்கள் கற்பிக்கும் பாடசாலையின் மாணவர்களிடம் பணம் வசூலித்து தனியார் வகுப்புகளை நடத்துவதை தடை செய்து சுற்றறிக்கை ஒன்று தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ரஞ்சித் யாப்பாவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.


தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பணம் அறவிடுவதைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.


அதன்படி இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎