ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளும் கட்சித் தலைவர்கள்  ஜனாதிபதிக்கு வழங்கிய உறுதி.  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ඇතුළු ආණ්ඩු පක්ෂයේ නායකයින් ජනාධිපතිවරයාට ලබා දුන් සහතිකය.


ரணில் மற்றும் பசிலுக்கு இடையில் நாளை விசேட சந்திப்பு.


 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை (21ஆம் திகதி) மாலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் தொடர்பிலான பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ள இந்த சந்திப்பிற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திரு பசில் ராஜபக்ஷவை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது அரசியல் ரீதியாக சாதகமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள சிலர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎