300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி  நிறுத்த அதிரடி தீர்மானம்.


 


 கடந்த வருடம் ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் ஜூலை மாதம் இறக்குமதி செலவை இருபத்தைந்து வீதத்தால் குறைக்க முடிந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


 பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, இறக்குமதிச் செலவு குறைந்துள்ளதுடன், சதவீத அடிப்படையில் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


 பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கம் எடுத்த தீர்மானங்களின் முடிவுகள் படிப்படியாக வந்துகொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


 ஏற்றுமதி வருமானமும் கணிசமான அளவு அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏற்றுமதி வருமானம் 90 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.


 மேலும், ஆகஸ்ட் 31, 2022க்குள் நாட்டின் மொத்த வருமானம் 1232.4 பில்லியன் ரூபாவாகவும், செலவு 3539 பில்லியன் ரூபாவாகவும் காணப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.


Author's Recommendation:

01 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டின் மற்றும் மதுபான விலையை அதிகரிப்பு..

டீசல் விலை குறைப்பது குறித்து வெளிவரும் தகவல்...