இன்னும் 2 நாட்களில் வரிசைகள் குறைக்கப்படும்.


 டீசலுக்காக  செலவிடப்படும் செலவுகளை கருத்தில் கொண்டு டீசல் விலையை தற்போது குறைக்க முடியாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


 அமைச்சின் பதில் செயலாளர் திரு.சமிந்த ஹெட்டியாராச்சியிடம் வினவியபோது, ​​டீசலுக்காக  செலவிடப்படும் செலவுகள்  இதுவரையில் மாற்றம் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.


 இவ்வாறான நிலையில் டீசல் விலையை குறைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


 எவ்வாறாயினும், பெட்ரோலின் விலை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


 ஒக்டேன் 92 லீட்டர் பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 30 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.


இதன்படி, ஒக்டேன் 92 லிட்டர்  ஒன்றின் புதிய விலை 410 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் புதிய விலை 510 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 டீசல் மற்றும் ஏனைய எரிபொருட்களின் விலை அப்படியே இருக்கும் என அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Author's Recommendation:

01 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டின் மற்றும் மதுபான விலையை அதிகரிப்பு..