நேற்று (01) நள்ளிரவு முதல்  அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டின் மற்றும் மதுபான விலையை அதிகரிப்பு..



நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை உயர்த்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.


  இதன்படி, 750 மில்லிமீற்றர் DCSL மதுபான போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


 ஏனைய மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


 கோல்லீஃப் மற்றும் பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன்படி,கோல்லீஃப் (Golleaf)சிகரெட் ஒன்றின் புதிய விலை 85 ரூபாவாகவும், பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் (Benson & Hedges) சிகரெட்டின் புதிய விலை 90 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டம் நேற்று (01) முதல் அமுல்படுத்தப்பட்டதன் மூலம் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, நிறுவனத்தின் ஏனைய சிகரெட் தயாரிப்புகளான கப்டன், பிரிஸ்டல் மற்றும் டன்ஹில் சிகரெட்டுகளின் விலை அதிகரிக்கப்படவில்லை என நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Author's Recommendation:

புதிய வரி விதிப்பால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிப்பு.


சவேந்திர உள்ளிட்ட இராணுவ வீரர்களுக்கு சர்வதேச தடை!