ஜனாதிபதி மாளிகையில் கிடைத்த பணத்தை போராட்டக்காரர்கள் இணைந்து எண்ணும் விதம்..(வீடியோ)


ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே 78 இலட்சத்து 50,000 பணம் தொடர்பான விசாரணைகள், உரிய முறையில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவில் இருந்து அதனை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (25) உத்தரவிட்டுள்ளார்.


 பொலிஸ் மா அதிபரின் உத்தரவு சட்டவிரோதமானது எனவும் இதன் மூலம் பொலிஸ் மா அதிபர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் எனவும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியான்சி அர்சகுலரத்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆகியோர் இன்று நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.


 குறித்த பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் இதுவரையில் அது நிறைவேற்றப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.


 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குமூலங்களை பதிவு செய்வது உள்ளிட்ட கட்டளைகளை தாமதப்படுத்தவோ அல்லது தவிர்க்க முயற்சிக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


 பணி தாமதமானால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக தனது நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதவான் தெரிவித்தார்.