மாணவர்களுக்கு பைஸர்  தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அவதானம்.

 

 பாடசாலைக் காலம் 12 ஆண்டுகள்.. 17 வயதில் பல்கலைக்கழக நுழைவு...



புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் மாணவர்களின் பாடசாலைக் காலம் 12 வருடங்களாகவும் 17 வயதில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பும் வரையறுக்கப்படும் என கல்விச் சீர்திருத்தங்களுக்கான நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இப்போது வரை, மாணவர்கள் 19 அல்லது 20 வயதில் பாடசாலையை விட்டு வெளியேறுகின்றனர், எனவே அவர்கள் பல்கலைக்கழகத்தில் நுழையும் போது 21 வயதுக்கு மேல்  ஆகிவிடுகின்றது.


புதிய முறையின் கீழ், கல்வி சீர்திருத்தங்களின் கீழ், 2025 ஆம் ஆண்டு முதல் 4 வயதில் ஒவ்வொரு குழந்தையையும் முன்பள்ளிக் கல்வியில் சேர்ப்பது கட்டாயமாக்கப்படும், அதற்காக முன்பள்ளியை அமைப்பை சீரமைக்க கல்வி அமைச்சு செயல்படும்.


புதிய சீர்திருத்தங்களின் கீழ், 6 முதல் 9 ஆண்டுகள் வரையிலான கனிஷ்ட இடைநிலை பிரிவு முறை 6 முதல் 8 வரை மாற்றப்படும், மேலும் 9-10 ஆண்டுகள் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் 11-12 ஆண்டுகள் க.பொ.த. உயர்தரம் என பிரிக்கப்படும்.


அதன்படி, 17 வயதிற்குள் அவர்கள் பாடசாலை கல்வியை முடிக்கவும், அதே நேரத்தில் பல்கலைக்கழகங்களில் சேரவும் வாய்ப்பு கிடைக்கும் வகையில், இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னோடி திட்டமாக இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎