பணம் அச்சிட்டதில் முடிவு 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம்..


 கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் சமீபத்திய தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாத பணவீக்கம் 69.8% ஆக அதிகரித்துள்ளது.


 அத்துடன், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் பிரகாரம், ஓகஸ்ட் மாதத்தில் 93.7% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம், செப்டெம்பர் மாதத்தில் 94.9% ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


 இந்த மாதத்தில் உணவு அல்லாத வகையிலும் பணவீக்கம் 57.6% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



இதையும் படிக்கலாம்: