ஐக்கிய மக்கள் சக்தியுடன் மீண்டும் இணையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்..(photos) - Kandy Time News

Breaking

Kandy Time News Time To Lead 

ஐக்கிய மக்கள் சக்தியுடன் மீண்டும் இணையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்..(photos)

 

image


   ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ்,எம்.எஸ்.தௌபீக், பைசல் காசிம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  இஷாக் ரஹுமான் ஆகியோர் இன்று (14) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்  அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர்.


தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சக்திக்கு தங்கள் ஆதரவை வழங்குவதாக தெரிவித்த இவர்கள், எதிர்கால அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னெடுப்பதாகவும் இதன் போது அவர்கள் தெரிவித்தனர்.


மேற்குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.FB-IMG-1652535263323 FB-IMG-1652535260866 FB-IMG-1652535258747 FB-IMG-1652535256618 FB-IMG-1652535254503 FB-IMG-1652535252049

No comments:

Post a CommentKandy Time News

எங்களுடன் இணைந்து கொண்டமைக்கு நன்றி... நம்பகத்தன்மையுடன் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.