உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யாவின் ‘ஸ்பெட்ஸ்நாஸ்’ சிறப்பு கமாண்டோக்கள்.


நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.


 அதன்படி, ஒவ்வொரு உறுப்பினருக்கும் 4 கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக 6 காவல்துறை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.


 மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக தலா இரண்டு T-56 துப்பாக்கிகளை பாதுகாப்புப் படையினருக்கு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.


 கடந்த மே மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


 இதேவேளை,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பிக்கு ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 சந்தேகநபர்கள் எஸ்.எம்.சந்திரசேன, சன்ன ஜயசுமன மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இது தொடர்பான விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் படிக்கவும்