இலங்கையை வீழ்த்தி இந்திய அணி



7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்கியது.


இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.


அதன்படி முதலில் களம் இறங்கி விளையாடிய இந்திய பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 பந்தில் 76 ரன்கள் குவித்தார்.


இதையடுத்து விளையாடிய இலங்கை பெண்கள் அணி 18.2 ஓவர் முடிவில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக  ஹர்ஷித சமரவிக்ரம 26 ரன்னும், ஹாசினி பெரேரா 30 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.


இந்தியா தரப்பில் தயாளன் ஹேமலதா 3 விக்கெட்டும், பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து இந்திய பெண்கள் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .