நொரோச்சோலை மீண்டும்  தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு..


  நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3வது மின் உற்பத்தி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக  செயலிழந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


 இதன் காரணமாக மின்வெட்டு நீடிக்கலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


 இதன்படி, மின்வெட்டு அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை எதிர்காலத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


 இதன்படி, இதனை திருத்தம் மேற்கொள்ள  3 முதல் 5 நாட்கள் வரை ஆகும் என அமைச்சர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


 திருத்தம் பணிகள் நிறைவடையும் வரை மின் உற்பத்தியை நிர்வகிப்பதற்கு எரிபொருள் மின் உற்பத்தி நிலங்களை  பயன்படுத்தப்படும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிடுகிறார்.


 தற்போது, ​​நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் பராமரிப்பு பணிக்காக இடைநிறுத்தப்பட்டுள்ளது.




இதையும் படிக்கலாம்:

மத்திய கலாச்சார நிதியத்தின் 106 கோடிக்கு நடந்தது என்ன?


கோதுமை விலை அதிகரிப்பு.. எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி..