கோட்டாபய தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை..


 

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கை திரும்புவார் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி அவரது பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை வைத்து அவர் வரும் தேதி தீர்மானிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 அன்று நாட்டை விட்டு வெளியேறினார், ஒரு நாளின் பின்னர் அவர் தனது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவித்தார்.


 முதலில் மாலைதீவு சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜூலை 14ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார். தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.


 "அவர் நிச்சயமாக திரும்பி வரத் தயாராக இருக்கிறார், ஆனால் அவரது பாதுகாப்புதான் முக்கியப் பிரச்சினை. அவர் திரும்புவதைத் தாமதப்படுத்துமாறு உளவுத்துறை அமைப்புகள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளன" என்று அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்பவுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.


 ஆனால், பாதுகாப்பு தொடர்பாக தெளிவான முடிவு எடுக்கப்படும் வரை அவரது வருகை தாமதமாகி வருவதாக சம்பந்தப்பட்ட செய்தியில் தெரிகிறது.