சுங்கத்


தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக துறைமுக நடவடிக்கைகள் பாதிப்பு


சுங்கத் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள சுங்க தொழிற்சங்க நடவடிக்கைகளினால், துறைமுக பரிசோதனைக் கூடங்களில் பெருமளவிலான கொள்கலன்கள் தடைப்பட்டுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதுவரை 600க்கும் மேற்பட்ட துறைமுக கொள்கலன்கள் சிக்கியுள்ளதாக அதன் தலைவர் திரு.சனத் மஞ்சுள தெரிவித்தார்.


இது தொடர்பில், சுங்க ஊடகப் பேச்சாளர் திரு.சிவலி அருக்கொட, தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொண்ட போதும், பல அத்தியாவசிய சேவைகளின் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.


கடந்த வெள்ளிக்கிழமை, பல சுங்கச் சங்கங்கள் மேலதிக நேர சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்தன.


சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் கீழ் இயங்கி வந்த வாங்கி கணக்கை நிதியமைச்சகம் எடுத்துக்கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது


சுங்க அதிகாரிகளின் சங்கம், சுங்க கண்காணிப்பாளர்களின் சங்கம் மற்றும் சுங்க ஊழியர்களின் சங்கம் ஆகியவை இந்த தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎