நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய செயற்குழுவின் அனுமதி..

அரசாங்கம் மற்றும் IMF இடையில் 16 அம்ச ஒப்பந்தம்.


சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை பூர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் 16 அம்ச செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் தீர்மானித்துள்ளன.


ஆட்சியின் தீர்ப்பின் (government Diagnostic) கருத்தை யதார்த்தமாக்கும் வகையில் இந்த கருத்து செயல்படுத்தப்பட உள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு. சாகல ரத்நாயக்க, நிதி இராஜாங்க அமைச்சர் திரு. ஷெஹான் சேமசிங்க மற்றும் முக்கிய வங்கிகளின் தலைவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவைப் பலப்படுத்துவது, வெளிப்படையான அரசாங்கப் பொறிமுறையை நிறுவுவது உட்பட 14 விடயங்களை அமுல்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளதுடன், இரண்டு விடயங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.


இலங்கை சுங்கம், உள்ளூர் வருமானவரித் திணைக்களம் போன்றவற்றில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அந்த இரண்டு விடயங்களையும் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் இலக்காகும்.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎