சட்டவிரோதமாக


விசா இன்றி மலேசியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் குழுவொன்று கைது 


 மலேசியாவில் முறையான விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் அந்நாட்டிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


 அங்கு, வெளிநாடுகளைச் சேர்ந்த 358 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது, அதில் 158 பேருக்கு மலேசியாவில் தங்குவதற்கு முறையான விசா இல்லை.


 கைது செய்யப்பட்டவர்களில் 83 ஆண்கள், 54 பெண்கள், 11 சிறுவர்கள் அடங்குவதாக மலேசிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


 கைது செய்யப்பட்டவர்களில், இலங்கையர்களைத் தவிர, இந்தோனேசியா, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.


 இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


 குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடத்திய விசாரணைகளில் சிலர் ம விசா லேசியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக சட்டவிரோதமாக தங்கி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.


 முறையான அனுமதியின்றி வெளிநாட்டவர்கள் வேலை வாய்ப்பு மற்றும் தங்கும் வசதிகள் வழங்கியது குறித்து விசாரணை நடத்தப்படும் என மலேசிய குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎