பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய விசேட உரை.



பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய ஆவண கேட்கும் ஜனாதிபதி.


 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய ஆவணத்தை தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதே பொருத்தமானது என ஜனாதிபதியிடம் யோசனை தெரிவித்த அரசியல்வாதிகள் குழுவிடம் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


 அதுமட்டுமின்றி, முதலில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா நடத்தப்படும் என்ற கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பலரிடம் 'நோ கமெண்ட்ஸ்' என்று கூறியுள்ளார்.


 இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதே பொருத்தமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (பொஹொட்டு) உறுப்பினர்கள் பலரும் பல்வேறு வழிகளில் ஜனாதிபதிக்கு செய்தி அனுப்பியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎