பலாங்கொட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மாயம்


பலாங்கொட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மாயம் 



கவரங்கேன, வஹிந்தன்ன, பலாங்கொட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று (12) இரவு பெய்த மழையுடன் கூடிய காலநிலையால் அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


வீடு ஒன்றில் இருந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் தற்போது காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், இவர்கள் பாரிய மண்மேடொன்று சரிந்து வீழ்ந்தமையினால்  மண்சரிவில்  சிக்கி கொண்டார்களா அல்லது மண்சரிவுடன் வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்களா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இச்சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளதாகவும், கடும் மழை காரணமாக அப்பகுதிக்கு செல்வது சிரமமாக இருந்ததால், அவர்கள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


எவ்வாறாயினும், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதி மிகவும் செங்குத்தான பிரதேசம் என்பதுடன் மேலும் பல வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்ற பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இதேவேளை, அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, ஆபத்தான மழை நிலைமை தொடர்பில் சர்வதேச வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.


බලංගොඩ පවුලක් අතුරුදන් කළ පස් කන්ද



බලංගොඩ ගවරංහේන, වැහිංතැන්න ප්‍රදේශයේ පස්කන්දක් නායයෑමෙන් එකම පවුලේ පුද්ගලයින් සිව්දෙනෙකු අතුරුදන්ව ඇති බව පොලීසිය පවසයි.


ඊයේ (12) රාත්‍රී එම ප්‍රදේශයට බලපෑ වැසි සහිත කාලගුණ තත්ත්වයත් සමඟ පස්කන්ද නාය ගොස් ඇති අතර එහිදි නිවාස 3කට හානි සිදුව ඇති බව වාර්තා වේ.


මෙහිදි එක් නිවසක සිටි මව, පියා සහ දියණියන් දෙදෙනා මේ වන විට අතුරුදන්ව ඇති බව පොලිස් මුලස්ථානය සඳහන් කළේය.


කෙසේවෙතත් ඔවුන් පස් කන්දට යටවී ඇත් ද එසේත් නොමැති නම් නායයාමත් සමඟ වෙනත් ස්ථානයකට ගොස් ඇතිද යන්න පොලීසිය පරීක්ෂණ ආරම්භ කර තිබේ.


ඊයේ රාත්‍රී කාලයේ මෙම සිදුවීම වාර්තා වු අතර පැවැති අධික වර්ෂාව හේතුවෙන් එම ප්‍රදේශයට ළඟාවීම අපහසු වීම මත ඔවුන් සම්බන්ධයෙන් නිශ්චිත තොරතුරු වාර්තා වී නොමැති බව පොලීසිය සඳහන් කළේය.


කෙසේවෙතත් නායයාමට ලක්වු ප්‍රදේශය අධික බෑවුම් සහිත ප්‍රදේශයක් වන අතර තවත් නිවාස කිහිපයක පුද්ගලයින් එම ස්ථානයෙන් ඉවත් කිරීමට ද ආරක්ෂක අංශ පියවර ගෙන තිබේ.


මේ අතර අනතුරුදායක වැසි තත්ත්වයක් සම්බන්ධයෙන් ජාත්‍යන්තර කාලගුණ බලධාරීන් අනතුරු ඇඟවීමක් සිදුකර ඇති බව කෘෂිකර්ම අමාත්‍ය මහින්ද අමරවීර මහතා හම්බන්තොට ප්‍රදේශයේ පැවැති උත්සවයකට එක්වෙමින් පැවසුවේ.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎