வந்தவுடன் வேலையை ஆரம்பித்த ரணில்!  சாகலுக்கு எண்ணெய்!  அகிலாவுக்கு உரம்!  ருவானுக்கு மருந்து!  வஜிரா மற்றும் ரங்கேக்கு உணவு!



 அச்சிடப்பட்ட மூன்று டிரில்லியன் ரூபா பணம் தீர்ந்து விட்டதாகவும், தற்போது அரசாங்கத்திடம் 100 பில்லியன் ரூபா மாத்திரமே இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


 எனவே அதிக பணம் அச்சிடுவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி தேவை எனவும், இல்லையெனில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


 எவ்வாறாயினும், பணத்தை அச்சிடுவதல்ல தமது பொருளாதாரக் கொள்கை எனவும், தற்போது பணம் அச்சிடப்படாவிட்டால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கோட்டா கோ ஹோம் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற இணங்கி உள்ளோம். இதற்கு என்ன வசதிகள் தேவை என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.  யாரும் இதனை  நிறுத்தச் சொல்லவில்லை.சிலர்  ரணில் கோ ஹோம் என்கிறார்கள்  நான் எங்கும் செல்ல வழியில்லை  நான் கொழும்பில் பிறந்தவன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


 குறிப்பாக எரிபொருள் மற்றும் உணவு குறித்தான சிக்கலை எவ்வாறு தீர்க்க முடியும் மற்றும் இந்த வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டுவர  முயற்சிப்பதாகவும் இதற்கு  பணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


 2021 iMF செல்லாமல் எங்கள் கையிருப்பை  பயன்படுத்தி எரிபொருளுக்கு பணம் செலுத்தப்பட்டது இதனால் தற்போது கையிருப்பு இல்லை நாடு வீழ்ந்துவிட்டது.அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


கேள்வி:-  ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே உங்களை பிரதமராக  நியமித்தாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச ஓட்டுவருக்கு வழிவகுக்க செயல் படுவதாகவும்  போது  மக்களும் குற்றம் சுமத்துகின்றனர்.


ரணில் :- ஜனாதிபதியகுவது ஒரு பக்கம் இருக்கட்டும் குறைந்த பட்சம் பாராளுமன்ற உறுப்பினராக கூட  ராஜபக்ச குடும்பத்தினர்  வரமுடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்


 பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.