1000 அடி உயரத்தில் அறுந்து விழும் நிலையில் கேபிள் கார்.. இரண்டு மாணவர்கள் மீட்பு. மீட்பு பணி தீவிரம்.


1000 அடி உயரத்தில் அறுந்து விழும் நிலையில் கேபிள் கார்.. இரண்டு மாணவர்கள் மீட்பு. மீட்பு பணி தீவிரம்.



பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அல்லாய் பள்ளத்தாக்கில் உள்ள கிராமத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மற்ற மாணவ மாணவிகள் தாம்டோர் நகருக்கு செல்வதற்கு, 1300 அடி உயரம் உள்ள குல் தோக் கேபிள் காரில் பயணம் செய்கிறார்கள். இன்று காலை அந்தரத்தில் கேபிள் கார் சென்று கொண்டிருக்கும் போது கேபிள் உடைந்ததால் கேபிள் கார் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதில் பயணம் செய்த 6 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் 1200 அடி உயரத்தில் கேபிள் காரில் சிக்கிக் கொண்டனர்.


இந்த 8 பேரை மீட்கும் பணியில் தற்போது ராணுவம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. அந்தரத்தில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.


மேலும், இந்த தகவல் வெளியானதை அடுத்து பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் மீட்பு பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.


பலத்த காற்று வீசுவதால் மீட்பு நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. “மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் கேபிள் காரில் சிக்கியவர்களில் இரு பாடசாலை மாணவர்களை மீட்டுள்ளனர்.



மேலும், இப்பகுதியில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் தினமும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கேபிள் கார் மூலம் பாடசாலைக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர் என உள்ளூர் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


කේබල් කාරයේ සිරවී සිටි දරුවන් දෙදෙනෙක් බේරාගැනේ


 සිසුන් දෙදෙනෙක් බේරා ගැනේ. ගලවා ගැනීමේ මෙහෙයුමේ.


පාකිස්ථානයේ වයඹ දිග Khyber Pakhtunkhwa පළාතේ Allai නිම්නයේ ගම්මානයේ සිට සෑම දිනකම තවත් සිසුන් සිය ගණනක් අඩි 1,200ක් උස Gul Thok කේබල් කාර් රථයෙන් Tamdor වෙත පැමිණේ. අද උදේ කේබල් කාර් එක ඒ පරතරයේ යද්දී කේබලයක කැඩි කේබල් කාර් එහි  එල්ලමින් තිබේ. එහි ගමන් ගත් සිසුන් 6 දෙනෙකු සහ ගුරුවරුන් දෙදෙනෙකු අඩි 1200ක් උසින් කේබල් රථයේ සිරවී තිබේ.


මේ 8 දෙනා බේරා ගැනීමේ කටයුතුවලට  බේරාගැනීමේ මෙහෙයුමේ නිරත හමුදා භටයින් නිරවි තිබේ. කේබල් රථයේ සිටින  සිසුන් වයස අවුරුදු 10ත් 15ත් අතර පසුවන්නන් බවයි වාර්තා වන්නේ.


එසේම මෙම තොරතුරු නිකුත් වීමෙන් පසු පකිස්ථාන භාරකාර අගමැතිවරයා මුදා ගැනීමේ මෙහෙයුම් සඳහා හමුදාවට  නියෝග කළේය. මේ තත්ත්වය තුළ හමුදා හෙලිකොප්ටර් යානා මුදාගැනීමේ මෙහෙයුම්වල නිරතව සිටිනවා.


දැඩි සුළං හේතුවෙන් ගලවා ගැනීමේ මෙහෙයුම් ප්‍රමාද වන බව පැවසේ. “ගලවා ගැනීමේ මෙහෙයුම්වල නිරත යුද හමුදා සාමාජිකයින් කේබල් කාර් රථයේ සිරවී සිටි පාසල් සිසුන් දෙදෙනෙකු බේරාගෙන තිබෙනවා.


එමෙන්ම ප්‍රදේශයේ ප්‍රවාහන පහසුකම් නොමැතිකම හේතුවෙන් දිනකට සියයකට අධික පිරිසක් කේබල් කාර්වලින් පාසල් වෙත අනතුරුදායක ගමනක් යන බව ප්‍රදේශයේ පාසල් ගුරුවරියක් පැවසුවාය.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎