க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு குறித்து பரீட்சை திணைக்களம் விசேட அறிவிப்பு..


அனைத்து மதங்கள் தொடர்பான சமய பாடத்திட்டத்தின் திருத்தம் மற்றும் அதன் நடைமுறை பரிசோதனைகள் அடுத்த வருடம் மேற்கொள்ளப்படும் என புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


இதன் போது பாடசாலையின் சமயப் பாடத்திட்டத்தில் கோட்பாட்டுப் பகுதியும், அறநெறி / அஹதியா பாடசாலை பாடத்திட்டத்தில் நடைமுறைப் பகுதியும் சேர்க்கப்பட உள்ளன.


2030ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் முதன்முறையாக இது தொடர்பான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.


சாதாரண தரப் பரீட்சையில் சமயப் பாடத்திற்கான புள்ளிகளை வழங்குவதில் 60% பாடசாலைக் கல்வியில் உள்ளடக்கப்பட்ட கோட்பாட்டு விடயங்கள் மூலமும் அறநெறி / அஹதியா பாடசாலை கல்வியில்  40% நடைமுறைக் கல்வி தொடர்பான விடயங்களை உள்ளடக்கியும் வழங்கப்படும் என புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎