ஆசிய அபிவிருத்தி வங்கி


 இலங்கைக்கு மேலும் நிதி உதவி வழங்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். 


ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் இன்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா மேற்கண்டவாறு தெரிவித்தார்.


 இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இலங்கை கடந்த 70 வருடங்களில் சந்தித்திராத பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கும் வாழ்க்கைத் தரத்தைப் பேணுவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி அண்மையில் 200 மில்லியன் டொலர் கடனை வழங்கியுள்ளது.


 "ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீண்டகால பங்காளியாக இலங்கை உள்ளது. நாங்கள் அவர்களுக்கு உதவி செய்கிறோம்" என்று மசட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார்.


 சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் முடிவடைந்தவுடன், இலங்கைக்கான ஏனைய நிவாரணப் வழங்க  இணைவது குறித்து பரிசீலிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.


இதையும் படிக்கலாம்:

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு பொதுத்தேர்தல் நடத்தப்படுமா??