வரி அடையாள எண்ணை பதிவு செய்யாவிட்டால் எவ்வளவு தண்டப்பணம் தெரியுமா?

 

TIN எண் அடையாள அட்டை வடிவில்..


தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனிநபரின் வரி அடையாள இலக்கமாக (TIN) பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.


இச்செயற்பாட்டின் மூலம் அரசாங்க வருமானம் குறித்து தெளிவான தரவு அமைப்பு உருவாக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.


18 வயதுக்கு மேற்பட்டவர்களின் உயிரியல் தகவல் அமைப்பைப் பயன்படுத்தி இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.


மக்களுக்கு இலகுவாக வரி அடையாள இலக்கம் (TIN) வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎