புதிதாக  VAT வரியை அறவிடு பொருட்கள்..

புதிதாக  VAT வரி அறவிடும் பொருட்கள்..


குழந்தைகளுக்கான சத்துணவு , உரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுவசரிய போன்றவற்றுக்கு மதிப்புக் கூட்டு வரி அல்லது பெறுமதி சேர் வரி (value-added tax) வரியை அறவிடுவதற்கு நிதி அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


 அதற்கிணங்க, அந்த பொருட்களுக்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்குமாறு அரசாங்கத்தின் நிதிக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இன்று (06) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.


 பெருமளவிலான துறைகளுக்கு VAT அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட தொகை VAT வரிவிதிப்பில்  இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் வரி வருமானம் தேவை என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் நியாயம் இருக்க வேண்டும் என குழுவில் சுட்டிக்காட்டப்பட்டதாக உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.