மின்வெட்டு அதிகரிக்கும்  அபாயம்..


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம்  செயலிழப்பு..நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தின் உயர் அழுத்த ஹீட்டர் அமைப்பு திடீரென செயலிழந்ததன் காரணமாக இன்று (17) இரவு முதல் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டியுள்ளது.


இதனால் தேசிய மின் கட்டமைப்பிற்கு கிடைக்க வேண்டிய 270 மெகாவாட் மின்சாரம் இழக்கப்படும்.


இலங்கை மின்சார சபை விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது.


 திருத்த பனிகளுக்கு  தேவையான பூர்வாங்க பணிகளை மின்சார சபை  ஊழியர்கள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் தேசிய மின் கட்டமைப்பிற்கு கிடைக்க வேண்டிய 270 மெகாவாட் மின்சாரம் இழக்க நேரிடும்.


மேலும், இந்த அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் (ஜெனரேட்டரின்) பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து தற்போது அதன் சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


அதன்படி, இந்த மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம்  விரைவில் மின்சாரம் தயாரிக்க முடியும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக மின்சார விநியோகம் தடைபடாது, இந்த பராமரிப்பு காலத்தில் அதிகபட்சமாக நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை செயற்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி செயலிழந்தது. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து மீண்டும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


නොරොච්චෝලේ ජනන යන්ත්‍රයක් බිඳ වැටෙයිනොරොච්චෝලේ තාප බලාගාරයේ දෙවන ජනන යන්ත්‍රයේ අධි පීඩක හීටර් පද්ධතියේ ඇති වූ හදිසි බිඳවැටීම හේතුවෙන් ජනන යන්ත්‍රය අද (17) රාත්‍රියේ සිට ක්‍රියා විරහිත කිරීමට සිදුව තිබේ.


ලංකා විදුලිබල මණ්ඩලය විශේෂ නිවේදනයක් නිකුත් කරමින් මේ බව සඳහන් කර ඇත.


බලාගාරයේ කාර්ය මණ්ඩලය මෙම බිඳවැටීම යථාතත්ත්වයට පත්කිරීම සදහා අවශ්‍ය මුලික කටයුතු මේ වනවිටත් ආරම්භ කර ඇතැයි එම නිවේදනයේ වැඩිදුරටත් දැක්වේ.


තවද මෙම බලාගාරයේ තෙවන ජනන යන්ත්‍රයේ නඩත්තු කටයුතු අවසන් කර ඇති අතර, මේ වනවිට එහි පරීක්ෂණ ධාවන කටයුතු සිදුකරන ලැබේ.


ඒ අනුව මෙම තෙවන ජනන යන්ත්‍රය ඉතා ඉක්මනින් විදුලිය නිෂ්පාදනය සඳහා යොමුකිරීමට හැකි බව ද එම නිවේදනයේ සඳහන්ය.


මේ හේතුවෙන් විදුලිබල සැපයුමට බාධාවක් නොවන අතර, මෙම නඩත්තු කාලය තුළ උපරිම ලෙස ජල විදුලි නිෂ්පාදනය සිදුකරමින් අඛණ්ඩව විදුලිය සැපයීමට ලංකා විදුලිබල මණ්ඩලය කටයුතු කරන බව ද නිවේදනයේ දැක්වේ.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎