எந்த தேர்தல் நடந்தாலும் மொட்டுக் கட்சி வெற்றி பெறும். - வேட்பாளர் சரியான நேரத்தில் வருவார்.- மஹிந்த ராஜபக்ஷ
எதிர்காலத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும் என்றும், சரியான நேரத்தில் பொருத்தமான வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படுவார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். .
கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு 420 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மதிய உணவும், கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பொதிகளும் கம்பஹா மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதனை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில், மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள 420 குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதாரப் பொருட்கள், 5000 ரூபாய் நிதியுதவி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
මොන ඡන්දේ තිබ්බත් පොහොට්ටුව දිනනවාමයි. - අපේක්ෂකයා අවශ්ය වේලාවට එයි.-මහින්ද
ඉදිරියේ දී කුමන මැතිවරණයක් පැවැත්වූවද ශ්රී ලංකා පොදුජන පෙරමුණ ඉන් ජය ගන්නා බවත්, සුදුසු අපේක්ෂකයෙකු අවශ්ය වේලාවට ඉදිරිපත් කරන බවත් හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ යළි ප්රකාශ කරනවා. .
ඔහු මේ බව කියා සිටියේ, ගම්පහ, දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ පැවැති උත්සවයකට එක්වීමෙන්.
හිටපු ජනාධිපති මහින්ද රාජපක්ෂගේ 78 වන ඡන්ම දිනය නිමිත්තෙන් ගැබිණි මව්වරුන් 420 දෙනෙකුට දිවා අහාරය පිරිනැමීම හා ගැබිණි මව්වරුන්ට අවශ්ය කරන සනීපාරක්ෂක ද්රව්ය ඇතුළත් පාර්සල් පිරිනැමීමේ පිංකමක් ගම්පහ දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ දී සංවිධාන කර තිබුණා.
අමාත්ය ප්රසන්න රණතුංග ඇතුළු ගම්පහ දිස්ත්රික් ශ්රී ලංකා පොදුජන පෙරමුණේ මැති ඇමැතිවරු විසින් මෙය සංවිධානය කර තිබුණා.
එහි දී එම දිස්ත්රික්කයේ සියලුම ආසනයන්හි අඩු ආදායම්ලාභි ගැබිණි මව්වරුන් 420 දෙනෙකුට අවශ්ය සනීපාරක්ෂක ද්රව්ය, රුපියල් 5000ක මුල්ය ආධාරයක් හා දිවා ආහාර වේලක් ද ලබාදෙනු ලැබුවා
🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎