முடிவுக்கு வருகிறதா 20 ஆண்டு எர்டோகன் ஆட்சி...? துருக்கி ஜனாதிபதி தேர்தல்.. - Kandy Time News

Breaking

𝖐𝖆𝖓𝖉𝖞 𝖙𝖎𝖒𝖊 𝖓𝖊𝖜𝖘  
Kandy Time News

Sunday 14 May 2023

முடிவுக்கு வருகிறதா 20 ஆண்டு எர்டோகன் ஆட்சி...? துருக்கி ஜனாதிபதி தேர்தல்..

 

முடிவுக்கு வருகிறதா 20 ஆண்டு எர்டோகன் ஆட்சி...? துருக்கி ஜனாதிபதி தேர்தல்..

துருக்கி தாயீப் எர்டோகன் (வயது 69). இவர் 2003ம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சியை செய்து வருகிறார். 2003-ம் ஆண்டு துருக்கி பிரதமரான எர்டோகன் 2014 ஆகஸ்ட் வரை வரை பிரதமராக செயல்பட்டார். துருக்கியில் பிரதமர் பதவி கலைக்கப்பட்டு உச்சபட்ச அதிகாரமாக ஜனாதிபதி பதவி கொண்டுவரப்பட்டது.


இதையடுத்து 2014 ஆகஸ்ட் மாதம் எர்டோகன் துருக்கி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் கடந்த 9 ஆண்டுகளாக எர்டோகன் துருக்கி ஜனாதிபதியாக செயல்பட்டு வருகிறார். ஒட்டுமொத்த அதிகாரமும் தன்வசம் கொண்டுள்ள எர்டோகன் சர்வாதிகாரியாக அறியப்படுகிறார். நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள துருக்கி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளது.


இந்நிலையில், துருக்கியில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் எர்டோகன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கிமல் கிலிக்டரொலு என்ற பொதுவேட்பாளரை நிறுத்தியுள்ளனர்.


கிமல் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலுடன் சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான தேர்தலும் இன்று நடைபெற்று வருகிறது.


 இன்று நடைபெறும் தேர்தலில் யாரேனும் ஒரு வேட்பாளர் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். அவ்வாறு பெரும்பான்மையை பெறவில்லை என்றால் வரும் 28ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்று வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.


 துருக்கியில் 20 ஆண்டுகள் எர்டோகன் ஆட்சி செய்த நிலையில் இந்த முறை நடைபெறும் தேர்தலில் அவர் தோல்வியடைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

🅺︎🅰︎🅽︎🅳︎🆈︎ 🆃︎🅸︎🅼︎🅴︎ 🅽︎🅴︎🆆︎🆂︎.🅲︎🅾︎🅼︎


Kandy Time News

எங்களுடன் இணைந்து கொண்டமைக்கு நன்றி... நம்பகத்தன்மையுடன் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.
Kandy Time News