எரிபொருள் விலையில் திருத்தம் குறித்து  அமைச்சர் அறிவிப்பு..

 

 இன்று (01) நள்ளிரவு முதல் 92  பெட்ரோல் லீட்டர் 40 ரூபாவாலும் 95 பெட்ரோல் லீட்டர் 30 ரூபாவாலும் குறைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கூறுகிறார்.


 இதன்படி, 92 பெட்ரோல் லீட்டர் புதிய விலை 410 ரூபாவாகவும், 95 பெட்ரோல் லீட்டர் புதிய விலை 510 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 மேலும், லங்கா ஐ.ஓ.சி. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் குறைக்கப்பட்ட அதே பெறுமதியால் பெற்றோலின் விலையை குறைப்பதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.