எரிவாயு விலை குறைவு. புதிய விலை இதோ

 


 இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.


 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 271 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.


இதன் அடிப்படையில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,280 ரூபாய் ஆகும்.


 இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 106 ரூபாவினாலல் குறைக்கப்பட்டுள்ளது புதிய விலை 1,720 ரூபாய் ஆகும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 48 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது புதிய விலை 800 ரூபாய் ஆகும் .


 தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் இந்த விலை குறைப்பு தொடர்பில் நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்தார்.